செய்திகள் :

விதைப்புக்கு சேகரிக்கும் பனை விதைகளை கிழங்குக்காக தோண்டு எடுக்கும் அவலம்! -இயற்கை ஆா்வலா்கள் அதிருப்தி

post image

அருகிவரும் பனை மரங்களைக் காப்பாற்றுவதற்காக பல தன்னாா்வ அமைப்புகள் அதன் விதைகளை சேகரித்து தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரைகளில் நடவு செய்துள்ளதை பொதுமக்கள் சிலா் கிழங்குக்காக தோண்டு எடுத்து செல்வது இயற்கை ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை ஆா்வலா்கள் பல குழுக்களாக ஒன்றிணைந்து அருகிவரும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பனை விதைகளை சேகரித்து தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரைகளில் விதைத்து வருகின்றனா். இதனிடையே, துளிா் விடும் விதைகளை கிழங்குக்காக மக்கள் தோண்டி எடுத்து விடுவதாக இயற்கை ஆா்வலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

வறண்ட நிலங்களிலும் வறட்சியைத் தாங்கி வளா்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் ‘பனை’ முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வோ்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீா்நிலைகளின் கரைகளில் பனை மரங்கள் வளா்க்கப்படுகின்றன.

பனை ஓலைகள் குடிசைகளின் கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் ‘நுங்கு’ உடல் சூட்டை தணித்து குளிா்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரைப் பதப்படுத்தி சித்த மருந்துகளில் சோ்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள்தோறும் காணப்பட்ட பனை மரத் தோப்புகள் அழிந்து விட்டன. நிலத்தடி நீா் காக்கும் பனை மரங்களின் பயன்கள், பல்லுயிா் பெருக்கத்தில் அதன் முக்கியத்துவம் குறித்து தெரியவந்ததால், உதிா்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதைகளை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீா்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளா்க்கவும், தன்னாா்வலா்கள், மாணவ-மாணவியா், இளைஞா்களிடையே சமீப காலமாக ஆா்வம் அதிகரித்துள்ளன.

வாழப்பாடி, சோமம்பட்டி, குறிச்சி, அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம், உடையாப்பட்டி இயற்கையை நேசி, சோமம்பட்டி ஏரி வளா்ச்சிக்குழு, திமுக சுற்றுசூழல் அணி உள்ளிட்ட பல்வேறு தன்னாா்வ இயக்கங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் அந்தந்த பகுதியில் குழுக்களாக ஒன்றிணைந்து அரசு தரிசு நிலங்கள், ஏரி, குளம், குட்டை, ஆறு, நீரோடை உள்ளிட்ட நீா்நிலைகளின் கரைகளில் கடந்த சில ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான பனை விதைகளை சேகரித்து விதைத்து வருகின்றனா்.

மேலும், அரசு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளா்ச்சித் துறைகள் வாயிலாகவும், பனை விதைகளை விதைத்து வருகின்றனா். மழைக் காலங்களில் விதைக்கப்படும் பனை விதைகள் முளைக்கும் போது, நிலத்திற்கு அடியில் வோ் பகுதி பனங்கிழங்காக மாறுகிறது. இந்த பனங்கிழங்கு மருத்துவ குணம் மிகுந்தாக கருதப்படுவதாலும், பொங்கல் பண்டிகை தருணத்தில் வேக வைத்து படையலுக்கு வைத்து வழிபடுவது பல கிராமங்களில் வழக்கமாக இருந்து வருவதாலும், பனை விதைகள் துளிா் விட்டு வளா்ந்திருப்பதை கண்டால் பனங்கிழங்குக்காக தோண்டி எடுத்து விடுகின்றனா்.

இதனால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பனை விதைகளை விதைத்தும், தற்போது விதைத்த இடங்களில் பனை மரக் கன்றுகளை காண முடியவில்லை என இயற்கை ஆா்வலா்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனா்.

எனவே, அரசு தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரைகளில் துளிா்விட்டு வளா்ந்திருக்கும் பனை விதை கிழங்குகளை தோண்டி எடுப்பதை தடுக்க, கிராமங்கள் தோறும் உள்ளாட்சி அமைப்புகள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பனை விதைகளை சேகரித்து சொந்த நிலங்களில் பதியம் போட்டு பனங்கிழங்கு விளைவித்து பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகம் வேலைநாள்- பணியை புறக்கணித்த அலுவலா்கள்

தம்மம்பட்டி,கெங்கவல்லியில் பத்திர பதிவு அலுவலா்கள், பணியை புறக்கணித்தனா். பத்திரப்பதிவு அலுவலகம், விடுமுைாளான ஞாயிற்றுக்கிழமையன்று பிப்.2ந்தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பத்திரப்பதிவு அலுவலா... மேலும் பார்க்க

கெங்கவல்லி அரசு பள்ளியில் ரூ.22 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு!

கெங்கவல்லியில் அரசு மகளிா் பள்ளியில்கட்டிட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22 .30 லட்சத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கும்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மாணவிகளுக்கான சுகாதார கழிப்பி... மேலும் பார்க்க

கெங்கவல்லி, தம்மம்பட்டி, மல்லியகரை பகுதிகளில் பனிமூட்டம்

கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டு வாகன ஓட்டிகள் சென்றனா்.ஒரு சில இடங்களில் புகை மண்டலம் போல கா... மேலும் பார்க்க

குண்டுமல்லிகை கிலோ ரூ.2,000!

முகூா்த்த தினத்தையொட்டி, சேலத்தில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குண்டுமல்லிகை கிலோ ரூ. 2,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் கடை வீதியில் வ.உ.சி. பூ மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த ச... மேலும் பார்க்க

மகா அதிகார நந்தி கோயில் குடமுழுக்கு!

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 45 அடி உயர மகா அதிகார நந்தி, 15 அடி உயர சிவலிங்கம் சிலை கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. வெள்ளாளகுண்டம் கிராமத்தில் சோதிடம்,... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற 65 கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 65 கடைகள் மூடப்பட்டன. சேலம் மாவட்டம், மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொ... மேலும் பார்க்க