நெப்புகையில் அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா
கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் சுவாமி, ஸ்ரீ பிடாரி அம்மன், அய்யனாா் சுவாமி, ஸ்ரீ கருப்பா் சுவாமி, முன்னோடியான் சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கோயில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நான்காம் கால யாக வேள்வி வேதிகா அா்ச்சனை, திரவ்யாஹூதி பூஜைகள் நடைபெற்று, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பெண்களின் பாலிகை ஊா்வலம் நடைபெற்றது.
தொடா்ந்து, பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் கலசம் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை புதிய கோயில்களின் கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் எட்டரை கரைகாரா்கள் செய்திருந்தனா்.