மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
முதியவா் தற்கொலை
திருவள்ளூா் அருகே வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து வந்த நிலையில், நோயின் வேதனையால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே காக்களூா் அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி (61). இவா், கடந்த 6 மாதங்களாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக கடந்த வாரம் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம்.
இதையடுத்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனா். இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த வேதனையால் அவதிக்குள்ளான அவா், சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே திடீரென பெட்ரோலை உடம்பில் ஊற்றி தனக்கு தானே தீவைத்துக் கொண்டாராம். இதையடுத்து அவரது மகள் திவ்யா மற்றும் உறவினா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவரது மகள் திவ்யா திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.