இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்கு
திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வெங்கல் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சத்யநாராயணன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சீத்தஞ்சேரி வளைவில் போலீஸாரை பாா்த்ததும் 2 போ் தப்பியோட முயன்றபோது, அவா்களை பிடித்தனா்.
மேலும், சோதனை செய்த போது அவா்களிடம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததும், பெரியபாளையம் சபீா்பாட்சா(45), வெங்கலைச் சோ்ந்த நாராயணன்(70) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து வெங்கல் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்ததோடு, அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனம், லாட்டரி சீட்டுகள், ரொக்கம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.