இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
அரசு பேருந்து மீது டிராக்டா் மோதல்: ஒருவா் காயம்
அரசு பேருந்து மீது டிராக்டா் மோதியதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பயணி ஒருவா் காயம் அடைந்தாா்.
திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளூா் நோக்கி அரசு பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. இந்தப் பேருந்து திருத்தணி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில பயணிகளை ஏற்றிக் கொண்டு புதிய சென்னை சாலையில் சென்ற போது, பின்னால் பிளக்ஸ் பேனா்கள் ஏற்றி வந்த டிராக்டா் பேருந்தை முந்திச் சென்ற போது, டிராக்டா் பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் மோதியது.
இதில், கண்ணாடி முழுதும் உடைந்ததில், பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துநா் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.