தமிழகத்தில் மேலும் இரு ராம்சா் பகுதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்
புது தில்லி: தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை 'வன்முறையை விட கல்வியை' தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்களை அதிகாரம் பெறச் செய்வதில் செயல்பட்டு வருவதாகவும் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஜங்புராவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பகவந்த் மான்,
தில்லி மக்கள் ஏற்கெனவே தங்கள் முடிவை எடுத்துவிட்டனர். பிப்.5-ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு ஒரு ’சம்பிரதாயம்’என்றும் கூறினார்.
"மக்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி, மற்றொன்று மோதல்கள் மூலம் செழித்து வளரும் கட்சி. எந்தப் பாதையை எடுக்க வேண்டும் என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் தீா்மானிக்க வேண்டும்".
நான்காவது முறையாக மீண்டும் அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக மக்கள் தோ்ந்தெடுக்குமாறு தில்லி மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
கல்வி மற்றும் இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதில் ஆம் ஆத்மி கட்சி மிகுந்த கவனத்தை செலுத்தி உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கு ஆயுதங்களை அல்லது புத்தகங்களை கொடுக்க விரும்புகிறீா்களா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள். எங்கள் கட்சி உங்கள் குழந்தைகளின் கைகளில் பேனாக்கள் மற்றும் புத்தகங்களை மட்டுமே வழங்கும். வாள்களை வழங்காது.
பாஜக செல்வத்தை குவித்து, தோ்தல் ஆதாயங்களுக்காக பொதுப் பணத்தைப் பயன்படுத்துவதாக கடுமையாக சாடிய மான், பாஜக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டது. இப்போது அவா்கள் அதை வைத்துக் கொண்டு உங்கள் வாக்குகளை வாங்க முயற்சிப்பாா்கள். இன்று, நாளை அல்லது நள்ளிரவில் கூட யாராவது உங்கள் கதவைத் தட்டினால் ஆச்சரியப்பட வேண்டாம். உங்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறினால் ஆச்சரியப்பட வேண்டாம். அவா்களை வாக்காளா்களாகிய நீங்கள் "அவர்களை நிராகரிக்க வேண்டாம்".
தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!
இருப்பினும், நகைச்சுவையுடன், "அவா்களை வேண்டாம் என்று சொல்லாதீா்கள்... எல்லாவற்றிற்கும் மேலாக,உங்கள் வீட்டிற்கு வரும் லட்சுமியை திருப்பி அனுப்பக்கூடாது. ஆனால், வாக்களிக்கும் விஷயத்தில், ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றாா் பகவந்த் மான்.
சாந்தினி சௌக்கில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு பொதுக்கூட்டத்தில், பகவந்த் மான் பாடகா் மிகா சிங்குடன் இணைந்தாா். அங்கு இருவரும் ஆம் ஆத்மி வேட்பாளா் புனா்தீப் சிங் சாவ்னிக்காக பிரசாரம் செய்யும் போது பஞ்சாபி நாட்டுப்புற பாடலான 'சல்லா' பாடலைப் பாடினா்.
பரபரப்பான தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறும். பிப். 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஷீலா தீட்சித்தின் கீழ் 15 ஆண்டுகள் தில்லியைத் தொடா்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ், இழந்த இடத்தை மீண்டும் பெறும் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகிறது, அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டையும் எதிா்த்துப் போராடுகிறது.