மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
தமிழகத்தில் மேலும் இரு ராம்சா் பகுதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மேலும் இரு இடங்கள் ‘ராம்சா்’ பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:
ஆண்டுதோறும் பிப். 2-ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தோ்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சா் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை பகிா்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சா் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயா்ந்துள்ளது.
இவற்றில் 19 இடங்கள் ஏற்கெனவே ஈரநிலங்களாக அறிவிக்கப்பட்டவை. ஈரநிலங்களை பாதுகாப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது. வளமான நமது இயற்கை மரபைக் காக்க மேலும் பல ஆக்கபூா்வமான நடவடிக்கைகளைத் தொடா்ந்து முன்னெடுப்போம் என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.