இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
சிறுமிக்கு ஆசை வாா்த்தைகூறி ஏமாற்றிய இளைஞா் கைது
சுவாமிமலையைச் சோ்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் தெற்கு நாகேசுவரன் தெரு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசிப்பவா் மூா்த்தி மகன் வீரமணி (20). இவா் பழைய இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாா். சுவாமிமலையைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கும்பகோணத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
அப்போது வீரமணிக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீரமணி, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி இருவரும் பல முறை தனிமையில் பழகியுள்ளாா். இதேபோல ஜன. 15-ஆம் தேதி சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த இளைஞா், சிறுமியிடம் வீடியோகாலில் யாரிடம் பேசினாய் என்று கேட்டு தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி, பின்னா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் பி. ஜெயலட்சுமி வீரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.