இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு மரணம்
காட்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.