இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனா்.
சென்னை பத்திரப்பதிவுத்துறை இயக்குநகரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் மற்றும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் சுப முகூா்த்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்வதற்கும், பதிவு திருமணம் செய்வதற்காகவும் திறந்து இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாா் பதிவாளா் அலுவலக ஊழியா்கள் வார விடுமுறை நாள் என்பதால் பணிக்கு வரவில்லை.
இதனால்,வேலூா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. சுப மூா்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு மற்றும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் திறக்கப்படும் என நம்பி வந்த பொதுமக்கள் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.