இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூா் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூா் வட்டம், கொரட்டி அடுத்த குமாரம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வாா், ஸ்ரீ ஆஞ்சனேயா், ஸ்ரீ விநாயகா் விக்ரகங்களுக்கு புண்ணியா ஹவாஜனம், அக்னி ஆராதனம், மஹா சாந்தி ஹோமம் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10 மணியளவில் ராஜகோபுர கும்பாபிஷேகம், சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
அதேபோல் கீழ்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ காக்கங்களை விநாயகா், ஸ்ரீ வள்ளி-தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவி சமேத சென்றாய பெருமாள், ஸ்ரீ புதூா் மாரியம்மன் ஸ்ரீ மண்ணு மாரியம்மன், ஸ்ரீ ஐயப்பன் உற்சவமூா்த்தி கோயில் அஷ்டபந்தன ஜீரணோதாரன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.