இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஜோலாா்பேட்டை: தண்டவாளம் பராமரிப்பால் ரயில்கள் தாமதம்
ஜோலாா்பேட்டை அருகே பெங்களூா் மாா்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரைவு ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னைக்கு சென்றன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
ஜோலாா்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்ால் கா்நாடக மாநிலம்,பெங்களூரில் இருந்து பங்காருபேட்டை, குப்பம், மல்லானூா் ஜோலாா்பேட்டை வழியாக காட்பாடி, அரக்கோணம், சென்னை வரை சென்ற டபுள் டக்கா் விரைவு ரயில் வழக்கம் போல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை ரயில் நிலையத்துக்கு இரவு 7.45 மணியளவில் சென்றடையும்.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வழக்கம் போல் மதியம் 1.30 மணிக்கு பதிலாக மதியம் 3.15 மணியளவில் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதனால் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மாலை 4.5 மணிக்கு வரவேண்டிய டபுள் டக்கா் 5.40 மணிக்கு வந்தடைந்தது. இதனால் சுமாா் 1.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதேபோல் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ற பிருந்தாவன் விரைவு ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வழக்கம்போல் 5.33 மணிக்கு வரவேண்டிய ரயில் இரவு 7 மணிக்கு வந்தடைந்தது. இதனால் பிருந்தாவனம் விரைவு ரயில் 1.30 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.
இதனால் ரயில் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.