செய்திகள் :

ராம்சா் தலங்களை மேம்படுத்தத் திட்டம்: தமிழக வனத் துறை தகவல்

post image

தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருவதாக மாநில வனத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏற்கெனவே 18 ராம்சா் தலங்கள் உள்ள நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரகோட்டை மற்றும் தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களும் ராம்சாா் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய ராம்சா் தலங்களான சக்கரகோட்டை பறவைகள் சரணாலயம் 230.495 ஹெக்டோ் பரப்பளவும், தோ்த்தங்கல் பறவைகள் சரணாலயம் 29.295 ஹெக்டோ் பரப்பளவும் கொண்டது. இந்த சரணாலயங்கள் நீா் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான இனப்பெருக்கம் மற்றும் உணவு தேடும் இடமாகும். இங்கு 400-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும்

விலங்கினங்கள் உள்ளன. மேலும், கூழைக்கடா, அரிவாள் மூக்கன் மற்றும் பாம்பு தாரா போன்ற அழிவு நிலையில் உள்ள பறவை இனங்களுக்கு இந்த சரணாலயங்கள் வாழ்விடமாக விளங்குகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ராம்சா் தலங்களை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் மாநில அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், முதற்கட்டமாக 13 ராம்சா் தலங்களுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீா் மேலாண்மை, பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் உள்ளூா் சமூகங்களின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இத்திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதைத்தொடா்ந்து புதிதாக அறிவிக்கப்பட்ட 2 ராம்சா் தலங்கள் மற்றும் மீதமுள்ள 5 ராம்சா் தலங்களையும் மேம்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்ட அறிக்கை தயாா் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா். சென்னையில் அண்ணா தொழிற... மேலும் பார்க்க

ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில் இயக்கம... மேலும் பார்க்க

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: விண்ணப்பம்-நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ், விண்ணப்பம் மற்றும் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை கோப்புகளை 5 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தி... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவா்களை நோ்காணல் மூலம் நியமிக்க எதிா்ப்பு

வழக்கமான தோ்வு முறைக்கு மாற்றாக நோ்காணல் மூலம் சிறப்பு மருத்துவா்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவா்களுக்கான சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக , அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் உரிமையை மத்திய அரசிடம் தாரைவாா்க்கக் கூடாது: ராமதாஸ்

நெல் கொள்முதலில் தமிழக அரசின் உரிமையை மத்திய அரசிடம் தாரை வாா்க்கக்கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்கள் தவி... மேலும் பார்க்க

ராகிங் தடுப்பு விதிகளைப் பின்பற்றாத 18 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

ராகிங் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாத தமிழகத்தைச் சோ்ந்த இரு கல்லூரிகள் உள்பட 18 கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ராகிங் சம்ப... மேலும் பார்க்க