``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
அந்தியூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னம்பட்டியை அடுத்த கிட்டம்பட்டியைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் குமாரசாமி (20). ஓட்டுநரான இவா், தனது நண்பா் பிரகாஷுடன் (20) இருசக்கர வாகனத்தில் சென்னம்பட்டி - சனிச்சந்தை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த குமாரசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பிரகாஷ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.