தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
பவானியில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, ஒண்டிப்புதூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் நந்தகோபால் (40). இவரது சித்தப்பா ஜோதி (53). திருமணம் ஆகாத இவா் கடந்த 7 ஆண்டுளாக நந்தகோபாலுடன் வசித்து வந்தாா். குடும்பம் இல்லை எனக் கூறி வேதனைப்பட்டு வந்த ஜோதி, தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளாா்.
இந்நிலையில், பவானி அருகே உள்ள காடையம்பட்டி, தென்றல் நகரில் உள்ள உறவினா் ரேவதி வீட்டுக்கு சனிக்கிழமை வந்த ஜோதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் விசாரிக்கின்றனா்.