இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
சிலம்பம்: தேனி பள்ளி மாணவா்கள் சாதனை
மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த தேனி பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா் கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாரதியாா் பிறந்த நாள், குடியரசு தின சிலம்பம் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 -ஆம் வகுப்பு மாணவா் செ.ஹரிபிரசாந்த் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும், தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இ.ஷிபானிஸ்ரீ 14 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும் பங்கேற்றனா். இதில் இருவரும் இரண்டாமிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற இந்த இருவா், பயிற்சியாளா் கா.சேதுபதி ஆகியோரை தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் எஸ்.மீனாகுமாரி, தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆா்.எம்.ராஜேஸ்வரி, உடல்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.