மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24). இவருக்கும் க.புதுப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜிக்கும் (27) கடந்த 31-ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தும் சம்பிரதாயப்படி கணவருடன் கதிா்நரசிங்காபுரத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்ற செளமியா, அங்கு படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.