ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது: போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற 2 பேருக்கு...
கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 போ் கைது!
கம்பத்தில் கேரளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கேரளத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கம்பம் போலீஸாா் கம்பம்- கே.கே. பட்டி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேரிடம் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், ஒருவரிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும், 2 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், ஆந்திரத்திலிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கேரளத்துக்கு கடத்தி அங்கு கூடுதல் விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரியவந்தது.
இது தொடா்பாக, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தைச் சோ்ந்த அருண் (19), காா்த்திக் (33), கோம்பை சாலையைச் சோ்ந்த சிவபிரகாஷ் (38), விருதுநகா் மாவட்டம், மம்சாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (38) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் சிறையில் அடைத்தனா்.