Central Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 | Nirmala Sitharaman | Modi | BJP...
காசியாபாத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து
காசியாபாத்: காசியாபாத் அருகே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்ததால் லாரியில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
எரிவாயு உருளைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் லாரியை நெருங்க முடியவில்லை.
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி தில்லி-வஜிராபாத் சாலை போபுரா சௌக் அருகே திடீரென தீப்பிடித்ததை அடுத்து லாரியில் இருந்து எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பயங்கர சத்தத்துடன் எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்த நிலையில், சுற்றுப்பகுதியில் இருந்த பதற்றத்துடன் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களால் தீப்பற்றி எரியும் லாரியை நெருங்க முடியவில்லை. எரிவாயு உருளைகள் வெடிக்கும் சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்பதாக தீயணைப்புத்துறை அதிகாரி ராகுல் குமார் கூறினார்.
லாரியில் 100-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள், காயங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு வீடு மற்றும் ஒரு கிடங்கு சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.