நிர்மலா சீதாராமன் : மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் குறித்து தெரியுமா?
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவை அடுத்து நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.
இவர் 2025க்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது அவரது 8-வது பட்ஜெட்டாகும்.
Nirmala Sitharaman
நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்தவர். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றவர், தற்போது தொடர்ச்சியாக 8-வது முறை பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ந்து அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இவரைப் போல தமிழகத்தில் இருந்து மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள் யார் யார்?
முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர் தான்.
1947ம் ஆண்டு சண்முகம் செட்டியார் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
கிருஷ்ணமாச்சாரி
1957, 1958, 1964, 1965 ஆண்டுகள் இந்திய பட்ஜெட்டை சமர்பித்தார் தமிழரான கிருஷ்ணமாச்சாரி.
இவரது பட்ஜெட்டில் தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
சுப்பிரமணியம்
1975ம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம். இவரும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
வெங்கட்ராமன்
1980, 1981ம் ஆண்டுகள் தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் இந்திராகாந்தி அமைச்சரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பா. சிதம்பரம்
1997ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் இவரது பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவில் அதிக பட்ஜெட்டுகள் தாக்கல் செய்தவர்கள் பட்டியலில் 9 பட்ஜெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் சிதம்பரம்.
மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.!