பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!
பட்னாவிஸ், ஷிண்டேயைக் கைது செய்ய உத்தவ் அரசு முயன்றதா? விசாரணை நடத்தும் மகா. பாஜக கூட்டணி அரசு
மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும் இந்த வெற்றி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆண்டு வரை முதல்வராக இருந்தார். அப்போது உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு வழிகளில் முயற்சி செய்ததாகவும், இதற்காகத் தேவேந்திர பட்னாவிஸைக் கைது செய்ய உத்தவ் தாக்கரே முயற்சி செய்ததாகவும் அப்போது கூறப்பட்டது.
இறுதியாக 2022 ஆம் ஆண்டு சிவசேனாவை உடைத்து உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தற்போது முந்தைய உத்தவ் தாக்கரே அரசு போலி வழக்கில் தேவேந்திர பட்னாவிஸைக் கைது செய்ய முயன்றதா என்பது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அமைச்சர் சம்புராஜ் தேசாய் அறிவிப்பை வெளியிட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று இதற்காகச் செயல்படும் என்றும், இக்குழு உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது போலி வழக்கில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரைக் கைது செய்ய முயன்றதா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தும் என்றும் அமைச்சர் சம்புராஜ் தேசாய் தெரிவித்தார்.
போலீஸ் அதிகாரி ஒருவர் டெலிபோனில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயைக் கைது செய்ய மும்பை போலீஸ் கமிஷனர் தயாராகி வருகிறது என்று பேசியதாகத் தொழிலதிபர் சஞ்சய் என்பவர் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் பிரவீன் தாரேகர் சில வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இப்போது அப்புகார் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு தனது அறிக்கையை 30 நாட்களில் தாக்கல் செய்யும் என்று அமைச்சர் தேசாய் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது திடீரென இப்போது ஏன் இது போன்று விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY