செய்திகள் :

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

post image

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிக்க : மத்திய பட்ஜெட் 2025-26: செய்திகள் உடனுக்குடன் - நேரலை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, பொருளாதார ஆய்வு அறிக்கையை இரு அவைகளிலும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை காலை நிதியமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.

2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும்

புது தில்லி: வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா ச... மேலும் பார்க்க

பட்ஜெட்: மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி!

மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்ம... மேலும் பார்க்க

1.15 நிமிடங்களில் நிறைவுபெற்ற மத்திய பட்ஜெட் உரை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையை நிறைவு செய்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ... மேலும் பார்க்க

இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்!

இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டத்தை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகி... மேலும் பார்க்க

பட்ஜெட்: ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது!

ரூ. 12 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.இதையும... மேலும் பார்க்க

திருக்குறளை மேற்கொள் காட்டி பேசிய நிதியமைச்சர்!

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வாசித்துவரும் நிர்மலா திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக... மேலும் பார்க்க