மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
குழந்தையுடன் இளம்பெண் மாயம்
போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்களுக்கு மாறன் (1) உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வனராஜா வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டில் மனைவி, 2-ஆவது மகனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான யமுனாதேவி, மாறன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.