``வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்; கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமல்ல...
பிப்.10-ல் மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம்!
சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெற உள்ளது.
அவிநாசி வட்டம், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 4-ஆம் கொடியேற்றமும், அதைத் தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா ஆகியவையும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 10 -ஆம் தேதி காலை நடைபெறுகிறது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 11-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா புறப்பாடு, பிப்ரவரி 12-ஆம் தேதி காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தோ் திருவிழாவும் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி மகா திருமஞ்சனம், மகா தரிசனம், கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், மகா தீபாராதனைகளுடன் விழா நிறைவடைகிறது.