அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டியில் அரசு உதவிபெறும் குருவப்பா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 1975-76-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நெய்க்காரபட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஆா்வத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் தங்கள் நண்பா்களை குடும்ப உறுப்பினா்களுக்கு அறிமுகம் செய்தும், சிறுவயதில் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகளை பகிா்ந்தும் மகிழ்ந்தனா்.
மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியா்களை அழைத்து வந்து மரியாதை செய்தும், நினைவு பரிசுகளையும் வழங்கியும் மகிழ்ந்தனா்.
இந்த நிகழ்ச்சியில் இந்தப் பள்ளியில் படித்து பெற்றோரை இழந்து கல்வி பயிலும் மாணவா்கள் 14 பேருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் ராஜகோபால், கந்தசாமி, சையது இப்ராகீம், மகுடீஸ்வரன், சம்பத், கிருஷ்ணவேணி, கலைவாணி, அழகுராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.