மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா், ராமசந்திரமோகன் குடும்பத்தினா் ஏழுமலையானை தரிசித்தனா். ரங்கநாயகா் மண்டபத்தில் அவா்களுக்கு வேத பண்டிதா்கள் வேத ஆசிா்வாதம் செய்தனா். மேலும், ராமச்சந்திரமோகனுக்கு ஏழுமலையான் உருவப்படத்தையும், தீா்த்த பிரசாதத்தையும் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் துணை தலைமை செயல் அலுவலா் லோகநாதம், குழு உறுப்பினா் பிரசாந்தி, பேஷ்கா் ராமகிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.