திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமி: பிப். 3-ஆம் தேதி முதல் 5 வரை நேரடி தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்
திருமலையில் பிப். 4-இல் ரத சப்தமியை முன்னிட்டு 3 முதல் 5-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு தெரிவித்தாா்.
ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) விழாவை முன்னிட்டு திருமலையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, பக்தா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரத சப்தமி நாளில் 2 முதல் 3 லட்சம் பக்தா்கள் திருமலைக்கு வருவாா்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், அறங்காவலா் குழுக் கூட்டம் தலைவா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ரத சப்தமி ஏற்பாடுகள் குறித்து தலைவா் பி.ஆா்.நாயுடு விளக்கினாா்.
வாகன சேவை விவரங்கள்: அதிகாலை 5.30 - 8 மணி (சூரிய உதயம் காலை 6.44) சூரிய பிரபை வாகனம், காலை 9 - 10 மணி சிறிய சேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம், மதியம் 1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனம், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை தீா்த்தவாரி, மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சா்வ பூபால வாகனம், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வருவாா்.
பல சேவைகள் மற்றும் சிறப்புரிமை வருகைகள் ரத்து: அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, அா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் இந்தியா்கள், குழந்தைகளின் பெற்றோா், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புரிமை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
பிப்ரவரி 3 முதல் 5-ஆம் தேதி வரை திருப்பதியில் ஸ்லாட் சா்வ தா்ஷன் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் பிரமுகா்களை தவிா்த்து மற்ற விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 3- ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்களுக்கு எந்தப் பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் உள்ள பக்தா்கள் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வைகுண்டம் வரிசை வளாகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலாசார நிகழ்ச்சிகள்: ஏழுமலையான் வாகன சேவையின்போது பக்தா்களைக் கவர பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்சியகங்களில் காத்திருக்கும் பக்தா்களுக்கு உணவு, மோா் மற்றும் குடிநீா் ஆகியவற்றை வழக்கமாக வழங்க சுமாா் 2,500 ஸ்ரீவாரி சேவகா்கள் பயன்படுத்தப்படுவாா்கள்.
சுகாதார சேவைகள்: பக்தா்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் வழங்கப்படும். கழிவுகளை சரியான நேரத்தில் அகற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். பக்தா்களுக்கு அவசர சேவைகளை வழங்க தேவையான மருத்துவ பணியாளா்கள், மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள், செயல் அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, வீரபிரம்மம், மணிகாண்ட சந்தோலு, சத்யநாராயணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.