சிமென்ட் சாலை, கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
ஆம்பூா் நகரில் சிமென்ட் சாலை, கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஆம்பூா் நகராட்சி 18-ஆவது வாா்டுக்குட்பட்ட ஜின்னா தெரு, நீலிக்கொல்லை ஒத்தவாடை 1-ஆவது தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தொடங்கி வைத்தாா்.
நகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளா் சண்முகம், நகா்மன்ற உறுப்பினா் நபீஸ் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.