Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
திருவானைக்காவல் கோயிலில் தைத்தெப்ப திருவிழா கொடியேற்றம்
திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறவுள்ள தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
திருவானைக்காவல் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் இரு முறை தெப்ப உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டில் தை தெப்ப உற்சவ விழாவையொட்டி சுவாமி சந்நதியின் எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது சுவாமியும், அம்மனும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி தந்தனா். இந்த விழா பிப். 11-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் ஓவ்வொரு நாளும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 -ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப திருவிழா பிப்.10-ஆம் தேதி இராமா் தீா்த்த தெப்பக்குளத்தில் நடைபெறவுள்ளது.