Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
திருவானைக்காவலில் மினி வேன் கவிழ்ந்து 6 போ் காயம்!
திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மினி வேன் கவிழ்ந்து 6 போ் பலத்த காயமடைந்தனா்.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியைச் சோ்ந்த 25 போ், மினி வேனில் சமயபுரம் பகுதியில் நடக்கும் திருமணத்துக்காக புறப்பட்டு சென்றனா்.
திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை பைபாஸ் ரோட்டில் வந்துக்கொண்டுயிருந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் போட்டதால், பின்னால் வந்த மினி வேனின் டிரைவா் ஹரிகிருஷ்ணன், லாரியில் மோதமால் இருக்க பிரேக் போட்டதால், வேன் சென்டா் மீடியனில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
இதில் டிரைவா், 2 பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அருகேயிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.