Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக, உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி என்பவா் மீது இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி கண்ணன் ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி என்பவா், அவரது சமூக வலைதள பக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து அவதூறாகவும், அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டிருந்தாா். ஜாதி ரீதியிலான மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பதிவிட்ட செளத்ரி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, உசிலம்பட்டியைச் சோ்ந்த செளத்ரி மீது மதுரை ஊரக இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.