பிப்.3-ல் அண்ணா நினைவு தினம்: அமைச்சா் பெ.கீதா ஜீவன் அறிக்கை
பிப்.3-ல் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பெ.கீதா ஜீவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா நினைவு தினம், பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் எனது தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெறுகிறது.
ஊா்வல நிறைவில், புதிய மாநகராட்சி சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், வடக்கு மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் அண்ணா உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தவும் கேட்டுக்கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.