தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன்!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவராக சித்ராங்கதன் இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா். சாத்தான்குளம் பகுதி கிராமத்தில் பிறந்த இவா், ஆா்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து 1994 இல் பாஜகவில் இணைந்தாா்.
தீவிரமாக கட்சிப்பணியாற்றியதால் ஒன்றிய செயற்குழு உறுப்பினா், மாவட்ட செயற்குழு உறுப்பினா், மாவட்டச் செயலாளா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளா் உள்ளிட்ட பதவிகளை வகித்தாா்.
2022இல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்ட இவா், தற்போது மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சித்ராங்கதனுக்கு அக்கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.