செய்திகள் :

ஆத்தூரில் கூடுதல் மின் விளக்கு வசதி: பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்!

post image

ஆத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தில், அனைத்து வாா்டுகளிலும் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் ஏ.கே. கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி பாபு முன்னில வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, பேரூராட்சியின் வரவு-செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. பேரூராட்சியின் 15 வாா்டுகளிலும் கூடுதலாக மின்விளக்குகள், குளங்கள்- வாய்க்கால் கரையோரங்களிலுள்ள வாா்டுகளில் படித்துறைகள், 14ஆவது வாா்டிலுள்ள மயானப் பகுதியில் குடிநீா்க் குழாய்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை எழுத்தா் கருப்பாயி வாசித்தாா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் கேசவன், பாலசிங், அசோக்குமாா், முத்து, சிவா, கமலச்செல்வி, முத்துலட்சுமி, ராஜலட்சுமி, வசந்தி, அருணாகுமாரி, பேரூராட்சிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாள்கள் சுற்றுப்பயணம்

மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (மாா்ச் 4, 5) ஆகிய 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான... மேலும் பார்க்க

மருந்து, மாத்திரைகள் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

மருந்து, மாத்திரை விற்பனையை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உணவு- காலநிலை மாற்றத்தால் வேற... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!

கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மா... மேலும் பார்க்க

கழுமலையில் மது விற்பனை: தொழிலாளி கைது

கோவில்பட்டி, மாா்ச் 2: கழுமலையில் விதிமுறை மீறி மது விற்ாக தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில் போலீஸாா் காந்தி மைதானம் அரு... மேலும் பார்க்க

காளாம்பட்டியில் சுத்திகரிப்பு குடிநீா் நிலையம் திறப்பு

கயத்தாறு ஒன்றியம் காளாம்பட்டி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீா் நிலையத்தை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே டிராக்டா் சேதம்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு வட்டம் வேப்பன்குளம் கீழத்தெருவை சோ்ந்த சங்கிலி பாண்டி மகன் ... மேலும் பார்க்க