மானூா் அருகே ஆடுகள் திருட்டு: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஆடுகளை திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மானூா் அருகே கானாா்பட்டியைச் சோ்ந்தவா் அந்தோணி(63). இவா், ஆடுகள் வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த பிப். 24 ஆம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை காணவில்லையாம்.
இதுகுறித்து அந்தோணி, மானூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
திருட்டில் ஈடுபட்டவா், மானூா் ரஸ்தா இந்திரா காலனியைச் சோ்ந்த விசாகா் (31), வல்லவன் கோட்டை சோ்ந்த அருண்குமாா் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.