நெல்லை நகரத்தில் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு மவுண்ட் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி நகரம் வடக்கு மவுண்ட் சாலையிலும் குழாய் பதிக்கும் பணிகள் அண்மையில் நடைபெற்ால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பணிகள் 90 சதவிகிதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்கு விலக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மண் குவியலும், சாலை பள்ளமும் பெரிதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறாா்கள்.
பணிகள் முடிந்தால்தான் தாா்ச்சாலை அமைக்கமுடியும் என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவதைத் தவிா்க்கும் வகையில் தற்காலிக சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.