‘மணிகண்டன் நிச்சயம் அதைச் செய்வார்...’: புஷ்கர் காயத்ரி
நடிகர் மணிகண்டனின் நடிப்புத் திறனை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி பாராட்டியுள்ளனர்.
குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய தொடர் வெற்றிகளால் நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.
இறுதியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக ரீதியாகவும் மணிகண்டனுக்கு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் விடாமுயற்சி!
இந்த நிலையில், இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி நேர்காணல் ஒன்றில், “மணிகண்டனுக்கு உடம்பெல்லாம் திறமைதான். அவரின் வளர்ச்சியைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. விஜய் சேதுபதிக்கு பின் அதிக அறிமுக இயக்குநர்களுடன் நடித்தது மணிகண்டன்தான். எதார்த்தமான பையன்.
அவர் ஒரு கதை வைத்திருக்கிறார். அவரால் மட்டும்தான் அதை இயக்கி, நடிக்க முடியும். இப்போது பிஸியாகிவிட்டார் என்றாலும் எப்போதாவது அப்படத்தை பண்ணுவார். எங்களுக்கு மிகவும் பிடித்த கதை அது” எனத் தெரிவித்துள்ளனர்.