செய்திகள் :

ஆஸ்கர் மேடையைக் கலக்கிய அனோரா! என்ன கதை?

post image

அனோரா திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளைப் வென்று கவனம் ஈர்த்துள்ளது.

2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விருது விழாவை நகைச்சுவை நடிகர் கேனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

இதில் சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை, திரைப்படம் என மொத்தமாக 5 விருதுகளை அனோரா திரைப்படம் குவித்தது.

ஆச்சரியமாக சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் இயக்குநர் சான் பேகர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்

மேலும், விருது வென்ற சான் பேகர் பாலியல் தொழிலாளிகளுக்கு விருதை சமர்ப்பிப்பதாக சொன்னதும், விழாவில் கலந்துகொண்டவர்கள் கைதட்டி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அனோராவின் கதை

அமெரிக்காவின் ப்ரூக்ளின் பகுதியிலிருக்கும் பாலியல் தொழிலாளியான அனோரா என்கிற அனி மிகீவா (மிக்கி மேடிசன்) பார் ஒன்றில் ரஷிய பணக்கார பையனான வான்யா சக்காரோவைச் சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் மோகம் தொற்றிக்கொள்ள, அனி அவனைத் தனியாக அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு, இருவரும் உறவு வைத்துக்கொள்கின்றனர்.

இளவயதான வான்யா அனியின் உடல் கொடுக்கும் இன்பத்தில் திளைப்பதுடன் ஒரு வாரத்திற்கு அவளை 15 ஆயிரம் டாலருக்கு வாடகைக்கு பேசி, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சுற்றித்திருவது, விருப்பம்போல் உறவில் ஈடுபடுவது என கொண்டாட்டமாக இருக்கிறான். வான்யாவுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அனியை ஈர்க்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

ஒரு பாலியல் தொழிலாளியைத் தன் மகன் திருமணம் செய்வதா என வான்யா குடும்பத்தினர் கொந்தளிக்க, உள்ளூர் மதகுருவை வைத்து அவர்களின் திருமணத்தை ரத்த செய்வதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் பணம், இன்னொருபுறம் சமூகம் என அனோரா இன்றைய இளம் தலைமுறையின் உணர்வுகளை சமூக கண்ணோட்டத்தில் ஆழமாகப் பேசுகிறது.

பொருளாதாரத்துக்கும் காதலுக்குமான இடைவெளிகளை நேர்மையாக இப்படம் பதிவு செய்திருப்பதாகவும் அனோராவாக நடித்த மிக்கி மேடிசன் இப்படத்தின் உயிர்நாடி என்றும் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர். அந்தளவு, கதையின் நோக்கம் மற்றும் நடிப்பிற்கு மிக்கி அபாரமான தேர்வாக இருந்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் சான் பேகர் பல பாலியல் தொழிலாளிகளிடம் அவர்களின் கதைகள் மற்றும் வாழ்க்கைகளைக் கேட்டே இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே, ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்ததுடன் பாலியல் தொழிலைக் குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைத்தார்.

கேங்கர்ஸ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் கேங்கர்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிவரும் திரைப்படம் கேங்கர்ஸ். முழுநீள நகைச்சுவைத... மேலும் பார்க்க

நடிகர் ஜெய்யின் புதிய படம்!

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை... மேலும் பார்க்க

நினைத்தாலே இனிக்கும் தொடரில் சின்ன மருமகள் நாயகி!

சின்ன மருமகள் தொடரில் நடித்துவரும் நடிகை ஸ்வேதா நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்கவுள்ளார். சின்ன மருமகள் தொடரின் நாயகியான இவர், நினைத்தாலே இனிக்கும் தொடரின் ரசிகர்களுக்காக சிறப்புத் தோற்றத்தில் நடிக... மேலும் பார்க்க

விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!

நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் இதயம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்

ஆஸ்கர் விருதுபெற்ற அனோரா படத்தின் இயக்குநர் தன் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின... மேலும் பார்க்க

ஞாயிறு வேலைக்குச் செல்வதைப் புகழ்ந்த மணிமேகலை!

சின்ன திரை நடிகை மணிமேகலை ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வது குறித்து பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சின்ன திரையில் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சிகளின்றி இருந்த மணிமேகல... மேலும் பார்க்க