தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.ப...
கோவில்பட்டியில் அரசுப் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் கோவில்பட்டியில் தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளா்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக கணக்கெடுத்து பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பணியாளா் சங்க மாநிலச் செயலா் மரகதலிங்கம் தலைமை வகித்தாா். டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் அந்தோணிராஜ், தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலா் கணேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பிரசார செயலா் மாடசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.