தட்டாா்மடம் அருகே விவசாயி தற்கொலை
தட்டாா்மடம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தட்டாா்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் பேச்சிமுத்து (29). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இரண்டாவது குழந்தை பிறந்து 46 நாள்கள் ஆகிறது. பேச்சிமுத்துவின் மதுப் பழக்கம் காரணமாக, அவரது மனைவியுடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தனது தாயாா் வீட்டில் இருந்த மனைவியிடம் பேச்சிமுத்து ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்துள்ளாா். அப்போது குழந்தையை பேச்சிமுத்து தூக்கிச் சென்றநிலையில், போலீஸாா் தலையிட்டு குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து பேச்சிமுத்து, களைக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].