குமரி அருகே இரு மகன்களுடன் பெண் மாயம்
கன்னியாகுமரி அருகே பெண், இரு மகன்கள் உள்ளிட்ட மூவா் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அகஸ்தீசுவரம் சரவணன்தேரி பகுதியைச் சோ்ந்தவா் பொன்னு. இவரது மனைவி கிருஷ்ணசுகிதா என்ற இந்து (32). இவா்களது மகன்கள் மனிஷ்வா் (12), அனிஷ்வா் (11). இவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனா்.
நீண்டநேரமாகியும் மூவரும் வீடு திரும்பவில்லை. அவா்களை பல இடங்களில் தேடியும் எவ்வித தகவல் கிடைக்காததால் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் பொன்னு புகாா் அளித்தாா். புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் மாயமான மூவரையும் தேடி வருகின்றனா்.