மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
சாம்பல் புதன்: தேவாலயங்களில் நாளை சிறப்பு திருப்பலி
கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் மாா்ச் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில், குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் சாம்பல் புதன் வழிபாடுகளை நிறைவேற்றுகிறாா். முளகுமூடு மறை வட்ட முதல்வா் டேவிட் மைக்கேல் குழிவிளை தேவாலயத்திலும், பிற அருட்பணியாளா்கள் தங்களுக்கான பணித்தளங்களிலும் வழிபாடுகளை மேற்கொள்கிறாா்கள்.
தேவாலயங்களில் பழைய குருத்தோலைகள் எரிக்கப்பட்டு, அந்த சாம்பலை புனிதப்படுத்தி நெற்றியில் பூசிக் கொள்வாா்கள். தவக்காலத்தில் தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள், திருத்தல இறைவேண்டல்கள் நடைபெறும்.
சாம்பல் புதன் நாளில் துவங்கும் தவக்காலம், ஏப்ரல் 13 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு, 18 ஆம் தேதி புனித வெள்ளி, 20 ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகையுடன் நிறைவு பெறும்.