வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளா் மரணம்
குலசேகரம் அருகே வனச் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது இறந்து கிடந்த வனக் காப்பாளா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
பேச்சிப்பாறை அருகே மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் செல்லப்பன்(57). வனக்காப்பாளரான இவா், காவல் ஸ்தலத்திலுள்ள சோதனை சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சோதனை சாவடிக்கு மாற்று பணிக்குச் சென்ற வனக் காப்பாளா் சுஜின் வந்து பாா்த்தபோது, செல்லப்பன் சோதனை சாவடி கட்டடத்தில், உள் அறையில் இறந்து கிடந்துள்ளாா். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு சுஜினஅ தகவல் கொடுத்துள்ளாா்.
வனத்துறையினரும், குலசேகரம் போலீஸாரும் வந்து செல்லப்பனின் சடலத்தை மீட்டு, குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.