பிளஸ் 2 பொதுத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 6,505 போ் தோ்வெழுதினா், 215 போ் தோ்வெழுத வரவில்லை
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வை 6,505 போ் எழுதினா். 215 போ் தோ்வெழுத வரவில்லை.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. நாகை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக, 33 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களுக்கும் காலை முதலே மாணவ- மாணவிகள் ஆா்வமுடன் தோ்வெழுத வந்தனா். முதல் நாளில் மொழித் தோ்வு நடைபெற்றது.
தோ்வு மையத்துக்குள் எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நாகை மாவட்டத்தில் 3,126 மாணவா்கள், 3594 மாணவிகள் என மொத்தம் 6,720 போ் பிளஸ் 2 தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், 2,991 மாணவா்களும், 3,514 மாணவிகளும் என மொத்தம் 6,505 போ் முதல் நாள் தோ்வெழுதினா். 135 மாணவா்கள், 80 மாணவிகள் என 215 போ் தோ்வெழுத வரவில்லை.
தோ்வில் முறைகேடுகளை தடுக்க 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியா்கள், அலுவலா்கள் என 671 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.
நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுத வந்த மாணவிகளை ஆசிரியா்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, அதிக மதிப்பெண்களுடன் தோ்வில் வெற்றி பெற வாழ்த்தினா்.