திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு, இன்று(மார்ச். 4) அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.34 மணிக்கு கடலில் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வருதல் நடைபெற்றது. தொடர்ந்து பணிவிடை, அன்னதர்மம், இனிமம் வழங்குதல் நடந்தது.
இதையும் படிக்க: உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

விழாவில் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிபதி வஷித்குமார், முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன், சட்ட ஆலோசகர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ் தர்மர், செயலாளர் பொன்னுத்துரை பொருளாளர் கோபால், துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், இணைத் தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.