செய்திகள் :

சின்ன திரையில் ஒரு பராசக்தி!

post image

சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடருக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இத்தொடருக்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகை தேப்ஜானி மொடாக் ராசாத்தி தொடரின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர், வானத்தைப் போல உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் மீண்டும் பவன் சந்திராவுக்கு ஜோடியாக பராசக்தி தொடரில் நடிக்கவுள்ளார். இத்தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மனைவி தொடரில் பவன் - தேப்ஜானி ஜோடியாக நடித்ததன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இவர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில்கூட ஜோடியாக நடித்தனர்.

இதையும் படிக்க: யோகிபாபுவின் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

இந்த நிலையில், பராசக்தி தொடர் மூலம் மீண்டும் சின்ன திரையில் பவன் - தேப்ஜானி ஜோடி இணைந்துள்ளது. மீண்டும் திரையில் இவர்களைப் பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இத்தொடரில் நடிகர் ரமேஷ் கண்ணா, குறிஞ்சி, ராஜா, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் ரமேஷ் கண்ணா முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்த்தில் நடித்துவரும் புதிய படத்துக்கு பராசக்தி எனப் பெயரிடப்பட்ட நிலையில், சின்ன திரை தொடருக்கும் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பராசக்தி தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாசிமக கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்புறம்பியம் கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மக பிரமோற்சவ கொடியேற்றத்தின்போது கொடிக்கயிறு அறுந்து விழுந்ததால் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்!

புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிர... மேலும் பார்க்க

சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம்!

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோ... மேலும் பார்க்க

ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!

நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.‘நேஷனல் க்ரஷ்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனாவுக்கு தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல அவர் நடிக்கு... மேலும் பார்க்க

சர்தார் - 2 படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம்!

சர்தார் - 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி... மேலும் பார்க்க

வீர தீர சூரன் 2-வது பாடல் அறிவிப்பு!

வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிய... மேலும் பார்க்க