செய்திகள் :

சக்ரபாணிசுவாமி கோயிலில் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம்!

post image

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் மாசிமக விழா நடைபெறும். இந்த பிரமோற்சம் மிகவும் விசேஷமானது, இவ்வாண்டிற்காண மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று காசிவிஸ்வநாதர், கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் காளஹஸ்தீஸ்வரர் என 5 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 5 சைவத்தலங்களில் மாசிமகப் பெருவிழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது.

இதனையடுத்து, வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாச்சார்யர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்கக் கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் சந்திரபிரபை, சேஷ வாகனம், கருட சேவை, ஹனுமந்த வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு காலை மாலையில் சுவாமி வீதியுலா முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி புதன்கிழமை காலை சக்கரபாணிசுவாமி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்தீர்த்தவாரி நிகழ்வின்போது, ஏராளமானோர் மகாமக திருக்குளத்திலும், காவிரியிலும் புனித நீராடி கரைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமிகளை தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு தொடரில் இணையும் பெண் நடனக் கலைஞர்!

நடிகை குஷ்பு நாயகியாக நடித்துவரும் புதிய தொடரில் நடனக் கலைஞர் பானுமதி நடிக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து வருகிறார். ர... மேலும் பார்க்க

மேல்லையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நட... மேலும் பார்க்க

நீ நான் காதல் தொடரில் 3வது முறையாக மாறும் நடிகை! மீண்டும் சாய் காயத்ரி!

நீ நான் காதல் தொடரில் நடிகை அஸ்ரிதாவுக்கு பதிலாக மீண்டும் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் இருந்து சில காலத்துக்கு இவர் விலகி இருந்ததாகவும், தற்போது மீண்டும் ... மேலும் பார்க்க

பேட் கேர்ள் டீசரை நீக்கக் கோரிய வழக்கு: கூகுள் பதிலளிக்க உத்தரவு!

பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை யூடியூப்பிலிருந்து நீக்கக் கோரிய வழக்கில் புதிய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வ... மேலும் பார்க்க

தள்ளிப்போகும் இட்லி கடை?

குட் பேட் அக்லியால் இட்லி கடை படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட... மேலும் பார்க்க

உள்ளுக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்! கேரள நடிகை பகிர்ந்த விடியோ!

சின்ன திரை நடிகை அஸ்வதி தனக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்ணை வெளிக்கொணர்ந்ததை விடியோவாகப் பதிவிட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், தமிழில் மோதலும் காதலும், மலர் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்... மேலும் பார்க்க