நீ நான் காதல் தொடரில் 3வது முறையாக மாறும் நடிகை! மீண்டும் சாய் காயத்ரி!
நீ நான் காதல் தொடரில் நடிகை அஸ்ரிதாவுக்கு பதிலாக மீண்டும் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் இருந்து சில காலத்துக்கு இவர் விலகி இருந்ததாகவும், தற்போது மீண்டும் அதே பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு நீ நான் காதல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது.
முழுக்க முழுக்க காதல் கதையாகவும், கணவன் மனைவி உறவை மையமாக வைத்தும் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் பிரேம் ஜேக்கம் நாயகனாகவும் வர்ஷினி சுரேஷ் நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
கதைக்கு ஏற்ப வர்ஷினியின் வசீகரமான தோற்றமும், பிரேமின் கம்பீரமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இத்தொடரில் சங்கரேஷ், விஜே தனுஷேக், மதுமிதா இளையராஜா போன்ற துணை பாத்திரங்களில் நடிப்பும் பெருமளவு இத்தொடர் சோர்வைத் தராமல் ஒளிபரப்பாவதற்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.

பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில், அஸ்ரிதாவுக்கு பதிலாக அணு என்ற பாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு இதே பாத்திரத்தில் நடித்தவர்தான். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியிருந்தார். தற்போது மிண்டும் அதே பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இத்தோடு 3வது முறையாக இந்த பாத்திரத்துக்கு நடிகை மாறுவதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாய் காயத்ரி மீண்டும் நீ நான் காதல் தொடரில் வந்ததற்கு சில ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஏற்கெனவே அந்த பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தவரின் நிலையை யோசித்துப்பார்க்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | உள்ளுக்குள் இருக்கும் தமிழ்ப் பெண்! கேரள நடிகை பகிர்ந்த விடியோ!