பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை ம...
ரூ.31 லட்சத்துக்கு ஏலம்போன கார்ல்சன் அணிந்த சர்ச்சை ஜீன்ஸ்!
செஸ் உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் அணிந்து சர்ச்சையான ஜீன்ஸ் ரூ.31 லட்சத்துக்கு (36,100 டாலர்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜீன்ஸுக்காக தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்றுவந்த ஏலப் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த இ-பே நிறுவனம் ஏலம் எடுத்து வென்றுள்ளது.
நார்வே நாட்டைச் சேர்ந்த செஸ் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்சென் உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்த ஆண்டு உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு விளையாடியது பெரும் சர்ச்சையானது.
ஜீன்ஸ் அணிந்துகொண்டு விளையாடுவது செஸ் விதிமுறைகளுக்கு எதிரானது என உலக சதுரங்க கூட்டமைப்பு (ஃபிடே) கூறியிருந்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை.
இதனால், கார்ல்சனுக்கு ரூ.17,076 ( 200 டாலர் ) அபராதம் விதிக்கப்பட்டது. அப்போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்நிலையில், உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் அணிந்துகொண்டு விளையாடி சர்ச்சையான ஜீன்ஸ் ஏலம் விடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கிய ஏலத்தில், இந்த சர்ச்சை ஜீன்ஸின் ஆரம்ப விலை 14,100 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டது. 22 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில், 94 முறை ஏலம் கேட்கப்பட்டது. இறுதியாக அமெரிக்காவின் இ - பே நிறுவனம் 36,100 டாலர்களுக்கு ஏலம் எடுத்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 31,54,436.
கார்ல்சன் அணிந்திருந்த இந்த ஜீன்ஸின் உண்மை விலை 300 - 500 டாலர்கள் மட்டும்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!