செய்திகள் :

பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!

post image

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான மோதலை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தவிர்த்து கடந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனாலும் வெள்ளை மாளிகை தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தி வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

டிரம்ப்புடன் வாக்குவாதம்

ரஷியாவுடனான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் மற்றும் கேமராக்கள் முன்னிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் துணை அதிபர் வான்ஸும் பேச்சு நடத்தினர்.

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த பிப்.28 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபா் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்தது. அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்ததிலிருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின. இவ்வாறான சூழலில், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை முற்றிலுமாக மாற்றிமைத்தாா் அதிபர் டிரம்ப்.

இருப்பினும், பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதற்காக அமெரிக்காவுக்கு வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்த, டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசாரமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப் பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழ, கோபமடைந்த ஸெலென்ஸ்கியும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வையும், மதிய விருந்தையும் புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.

எக்ஸ் ஆக்டிவாக இருக்கும் ஸெலென்ஸ்கி

எக்ஸ் தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸெலென்ஸ்கி பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த விவாதம் குறித்தோ.. அல்லது இந்தக் கருத்து மோதல் குறித்தோ.. எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காமல் தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டது இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபருடன் சந்திப்பு, வாஷிங்டனில், அமெரிக்க செனட்டின் கட்சி பிரதிநிதிகளை சந்தித்தது, அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் சந்திப்பு குறித்தும் அடுத்தடுத்து பதிவுகளை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார் ஸெலென்ஸ்கி.

மேலும், மார்ச் 1 ஆம் தேதி வெளியிட்டிருந்த பதிவில், அமெரிக்காவின் ஆதரவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் நன்றி. உக்ரைனுக்கு நியாயமான மற்றும் அமைதி கிடைக்க நாங்கள் பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க: போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

மோதலின் விளைவாக உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்திவிட்டது அமெரிக்க அரசு. நிறுத்தினாலும் பரவாயில்லை என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் ஸெலென்ஸ்கியைச் சுற்றி ஒரு அணியாக திரள முயற்சித்து வருகின்றன.

ஐரோப்பிய ஆணையா் உா்சுலா வொண்டொ் லேயன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, ஜொ்மனியின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஃப்ரெட்ரிச் மொ்ஸ் உள்பட ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த கூட்டணி நாடுகளின் தலைவா்கள் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மட்டுமின்றி போலந்து பிரதமர், மால்டோவா அதிபர், லிதுவேனியா அதிபர், லாட்வியா அதிபர், செக் குடியரசின் அதிபர், சுவீடன் பிரதமர் என அனைவரும் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். ஸெலென்ஸ்கியும் அவர்களின் பதிவுக்கு ‘ஆதரவுக்கு நன்றி’ என அனைவரின் பதிவையும் மறுபதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

பதிவுக்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி உள்பட சில முக்கிய தலைவர்களையும் ஸெலென்ஸ்கி சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

ஆனால், அமெரிக்க அதிபரைச் சந்தித்தது பற்றியோ... இந்த விவாதம் குறித்தோ.. எந்தப் பதிவுகளையும் பதிவிடாமல் தவிர்த்துக் கடந்துவிட்டார் ஸெலென்ஸ்கி.

இது ஒருபுறமிருக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பு, துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் விடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறது.

அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் பக்கத்தில் அமெரிக்கா குறித்த பதிவுகளை முற்றிலுமாக தவிர்த்ததைப் போன்று ஸெலென்ஸ்கியின் செயல்பாடுகள் உள்ளதாக சில அரசியல் கண்காணிப்பாளர்கள் கருத்தாக உள்ளது.

பெரும் பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்காவை பகைத்துக்கொண்ட பதற்றம் சிறிதுமின்றி, தனது நாட்டின் நலன் சார்ந்த அடுத்தடுத்தகட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு செல்லும் ஸெலென்ஸ்கியின் முன்பு, இன்னமும் விவாதம் குறித்த விடியோக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றும் வெள்ளை மாளிகையில் நடவடிக்கையை என்னவென்று சொல்வது?

இதையும் படிக்க: கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?

பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவின் இமய மலையில் இரு... மேலும் பார்க்க

இது போர் நடவடிக்கை: டிரம்ப் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக... மேலும் பார்க்க

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 இந்தியர்கள் கைது!

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு நேபாளத்தின் ஜித... மேலும் பார்க்க

ராணுவ பட்ஜெட்டை உயர்த்தும் சீனா!

பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்... மேலும் பார்க்க

ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

அமெரிக்கா தனது ராணுவத்தை ஐரோப்பியத் தளங்களிலிருந்து திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட அமெர... மேலும் பார்க்க

மனைவியை சமாளிப்பது எப்படி? கபிங்காவிடம் கேளுங்கள்!

ஒரே ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் நண்பர்களிடமும் கூகுளிலும் உபாயங்கள் தேடிக்கொண்டிருப்பவர்கள், தான்சானியாவைச் சேர்ந்த கபிங்காவைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.கபிங்கா சப்தமே இ... மேலும் பார்க்க